கவின் வெளியேறியது குறித்து வனிதா போட்ட டிவிட்!

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் ரூ 5 லட்சம் பணத்துடன் வெளியேறினார். கவின் வெளியேறியது, சாண்டி மற்றும் லொஸ்லியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவினின் இந்த செயல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா மற்றும் திரைத்துறையினர் கவின் வெளியேறியது குறித்து வருத்ததுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வனிதா விஜயகுமார் கவின் குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் கவினுக்கு சல்யூட் அடிக்கிறேன். அவன் இந்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமார், கவின் ஆர்மி என குறிப்பிட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.