விஜய் காப்பி அடித்து பேசினாரா?

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டி கதை ஏற்கனவே பிரபல பெண் பேச்சாளர் ஒருவர் பேசியதை அப்படியே காப்பி அடித்ததாக தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தாம்பரம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிகில் சினிமாவின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கின்றார். இந்த விழாவில் விஜய் அரசியல் கருத்துக்கள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் குட்டி கதை ஒன்றை கூறினார். அந்தக் கதையில், “பூக்கடையில் வேலை பார்க்கும் ஒரு சிறுவனுக்கு பட்டாசு கடையில் வேலை தரக்கூடாது. அப்படி கொடுத்தால், பழக்க தோஷத்தில் அவர் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வியாபாரத்தை பாதிக்கவைப்பான். யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் என பேசினார்.

விஜய்க்கு முன்னதாகவே பிரபல பெண் மேடைப் பேச்சாளர் ஒருவர் இதே கதையை மேற்கோள் காட்டி பெரும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து, அந்த பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் தற்போது விளக்கம் தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த விழாவில் விஜய் முதலில் சொன்னது திருக்குறள். அதை காப்பி என்று யாரும் சொல்ல முடியாது.

அதன்பின் அவர் ஒரு கதை சொன்னார். அதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல பல பட்டிமன்ற பேச்சாளர்கள் இந்த கதையை சொல்லி இருக்கிறார்கள். அதனால் விஜய் வேறு எங்காவது அதை கேட்டு இருக்கலாம். இதை காப்பி என்று சொல்ல முடியாது என்று கூறினார்.