உங்க வீட்டுல இந்த பொருட்கள் இருக்கிறதா?.. உடனே தூக்கிவீசிடுங்க!

வாஸ்து சாஸ்திரம் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு தொன்மை வாய்ந்த சாஸ்திரமாகும். அதன்படி நீங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களுக்கு துரதிர்ஷ்டத்தையும், ஏழ்மையையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அழுக்கு நீர்

உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் வீட்டைச் சுற்றியோ அழுக்கு நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டிற்கு தவறான தோற்றத்தை வழங்குவதுடன் மோசமான வாஸ்து சாஸ்திரத்தையும் ஏற்படுத்துகிறது. வீட்டைச் சுற்றி அழுக்கு நீர் இருப்பது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வழிவகுக்கிறது மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.

முள் செடிகள்

உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ முள் செடிகளை வைக்கக்கூடாது, உங்கள் தோட்டத்தில் கூட இந்த வகை செடிகளை வைக்கக்கூடாது. இந்த செடிகள் வீட்டில் இருப்பது உங்களுக்கு ஆரோக்கிய குறைபாட்டுகளை உண்டாக்கும். மேலும் இது உங்கள் இல்லத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீட்டிற்கு வெளியே கற்கள்

உங்கள் வீட்டிற்கு வெளியே கற்கள் சேகரிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் வேலை இருந்தால் வேலை முடிந்தவுடன் அந்த கற்களை அப்புறப்படுத்தி விடுங்கள். வீட்டிற்கு வெளியே கற்கள் இருப்பது பிரச்சினைகளின் அறிகுறியாகும். இது உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.

குப்பை

குப்பையை சுத்தம் செய்பவர்கள் அதனை அப்புறப்படுத்திவிடுவார்கள் என நாம் அனைவருமே குப்பைகளை வீட்டிற்கு வெளியே வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் குப்பையை வீட்டிற்கு வெளியே வைப்பது ஒரு மோசமான வாஸ்துவாகும். வீட்டிற்கு வெளியே குப்பையை வைத்திருப்பது வீட்டில் நிதி சிக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது கடன் தொல்லையை அதிகரிக்கும்.

மின்கம்பங்கள்

வீட்டிற்கு வெளியே மின்கம்பங்கள் இருப்பது பொதுவானதாக கருதப்படுகிறது. இது ஆபத்தானது மட்டுமல்ல, மோசமான வாஸ்துவாகவும் கருதப்டுகிறது. மின்கம்பத்தில் சிக்கலான வயர்கள் இருப்பது போல உங்கள் வீட்டின் முன் மின்கம்பம் இருப்பது உங்கள் வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே இது இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

பெரிய மரங்கள்

பொதுவாக வீட்டிற்கு வெளியே பெரிய மரம் வைத்திருப்பது நல்லது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி அவ்வாறு இருப்பது துரதிர்ஷ்டமானதாகும். இது உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி வருவதை தடுக்கிறது. மேலும் இது உங்கள் வீட்டிற்குள் வரும் நேர்மறை ஆற்றலையும் தடுக்கிறது.

வீட்டு நுழைவாயில்

வாஸ்துவின் கூற்றுப்படி, வீட்டிற்கு வெளியே உள்ள பிரதான சாலை நீங்கள் பிரதான கதவின் தளத்தை விட மேலே இருக்கக்கூடாது. உங்கள் கதவு எப்போதும் ஒரே மட்டத்தில் அல்லது பிரதான சாலையை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டில் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைய தொல்லைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளைக் காண்பீர்கள். உங்கள் கதவு இப்படி கட்டப்பட்டிருந்தால், அதை உடனடியாக சரிசெய்யவும்.