சூர்யாவுடன் பாலா மீண்டும் கூட்டணி?

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து சூர்யா நடித்துவரும் சூரரை போற்று ஷூட்டிங் நேற்றொரு முடிவடைந்தது.

இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் பரவும் செய்தி என்னவென்றால் நடிகர் சூர்யா அடுத்து பாலா இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது தான். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு பிறகு அவர்கள் இணைவது மூன்றாவது முறை.

மேலும் இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோரும் நடிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.