கோதுமை தோசை செய்வது எப்படி??

தேவையானவை:

கோதுமை மாவு – 1 கப்

பெரிய வெங்காயம் – 2

சிறிய வெங்காயம் – 4

காய்ந்த மிளகாய்-2

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு ஆரருக்கு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிது

செய்முறை:

சிறிய வெங்காயத்துடன் காய்ந்த மிளகாயை வாணலியில் தனியே வதக்கி அதனை மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளுங்கள்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை,உப்பு மாவுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாத மாவாக கரைத்துக் கொள்ளவும்.கரைத்த மாவு திக்கான மோர் பதத்தில் இருக்க வேண்டும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடேற்றவும்.கல்லின் மீது பரவலாக லேசான எண்ணெய் துடைக்கவும். மாவை மேலிருந்து ஊற்றவும்.

பிறகு தோசையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, அடிப்பாகம் பொன்னிறமாகும் வரை வேக விடவும்.

சுவையான கோதுமை தோசை ரெடி!!