இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு! காரணம் என்ன ?

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வருகின்ற அக்டோபர் 2ம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம், புனே மற்றும் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி ஆனது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அணியில் கடந்த  வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய அணியே மீண்டும் விளையாட உள்ளது. அணியில் ஒரே ஒரு மாற்றமாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ராகுல் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதுமுக வீரராக ஷுப்மன் கில் அணியில் இணைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் முதுகில் ஒரு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது, அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (வி.சி), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த், விருதிமான் சஹா, ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தேப் யாதேஜா , முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மான் கில்