இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர்., அதே பகுதியை சார்ந்த 19 வயது பெண்ணை நாடக காதலால் ஏமாற்றியுள்ளார். காம கொடூரனின் நாடக காதலில் விழுந்த சிறுமிக்கு., பற்பல கவிதைகள் மற்றும் கதைகள் சொல்லி காம கொடூரன் நாடக காதலை வளர்த்து வந்துள்ளான்.
இந்த சமயத்தில்., தனது இல்லத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற காம கொடூரன்., தனது தாயாரிடம் சிறுமியை அறிமுகம் செய்யவே., அவரும் சிறுமியை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்துள்ளார். இந்த சமயத்தில்., மகனுக்கு உடந்தையாக தாயார் இருக்கவே., சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பை வழங்கியுள்ளார்.
இந்த விஷயத்தை அறியாத சிறுமி., இனிப்பு பலகாரத்தை சாப்பிடவே., சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை நாடக காம காதல் கொடூரன் பலாத்காரம் செய்த நிலையில்., இந்த காட்சிகளை நாடக காதலனின் தாயார் பதிவு செய்துள்ளார்.
சிறுமி மயக்கத்தில் இருந்து எழுந்து., தன்னிலை அறிந்து கதறியளவே., சிறுமியிடம் நாடகக்காதல் மற்றும் பணம்பறிப்பு குடும்ப கும்பல்., விடியோவை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நாடக காதலால் ஏமார்ந்து – கற்பை பறிகொடுத்து செய்வதறியாது திகைத்த சிறுமி., தனது வீட்டில் நிலம் விற்பனை செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ.4 இலட்சத்தை நாடக காதல் கும்பலிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., அவசர தேவைக்காக பெண்ணின் தந்தை பணம் குறித்து சிறுமியிடம் கேட்கவே., இதனையடுத்து நடந்த விசயத்தை கூறி சிறுமி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாடக காம காதல் மற்றும் பணம்பறிப்பு கும்பலை சார்ந்த குடும்ப நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.