முக்கிய பிரபலங்களுடன் மோதும் தமன்னா!

நடிகர் விஜயின் ”பிகில்”, மற்றும் கார்த்தியின் ”கைதி” ஆகிய திரைப்படங்கள் தீபாவளித் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது தமன்னாவின் ”பெட்ரோமாக்ஸ்” திரைப்படமும் வெளியீட்டுக்கு தாயாராகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஈகிள் ஐ புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். அத்துடன் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய், கார்த்தி என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் தமன்னாவின் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதில் யாருடைய திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.