இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு தோனியே விருப்பப்பட்டு தான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானவண்ணம் உள்ளது. இதனால் தோனி கூடிய விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, டிஎன்பிஎல் போட்டிகள் இனி இந்த கோவை மைதானத்திலும் நடைபெறும் என தெரிவித்தார்.
தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு, அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தான் கேப்டனாக நீடிப்பார் என கூறினார்.