இறுக்கமான உடையில், உருக்கமான போட்டோவை வெளியிட்ட தமன்னா.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமன்னா தமிழில் மட்டுமில்லை.

தெலுங்கு, இந்தி படங்களிலும் அவர் பயங்கர பிஸியாக இருக்கின்றார். இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் இவர் இந்திய அளவில் பெரும் அளவில் பிரபலமாக ஆகினார். பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் தமன்னா மிகவும் இறுக்கமான கவர்ச்சியை வெளிக்கொணரும் உடையை அணிந்து போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த போஸ்டர் வைரல் ஆன நிலையில் அதற்கு ரசிகர்கள் பல்வேறு மோசமான விமர்சங்களை வைத்து வருகின்றனர்.