காதல் ஜோடியின் ஹை பட்ஜெட் திருமண முடிவு.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவரின் பெயர் ஆறுமுகம். இவரது மகளின் பெயர் வித்யா. இவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தவாறு., தனது சகோதரருக்கு இணையதள அழைப்பில் தொடர்பு கொண்டு மர்ம நபர் தன்னை கடத்திவிட்டதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் மீண்டும் தனது அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கையில்., அவரது அலைபேசி எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்தது. பின்னர் சுமார் 5 மணிநேரம் கழித்த நிலையில்., வித்யாவின் தந்தைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்., ரூ.10 இலட்சம் பணம் வழங்குமாறும்., பணம் வழங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வித்யாவின் தந்தை., தனது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு., கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை ஏற்ற காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்துள்ளனர்.

மேலும்., கைகளில் சாதாரண அலைபேசி உள்ள நிலையில்., இணையதள தொடர்பில் எவ்வாறு பேசியிருக்க முடியும் என்று சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில்., சென்னையில் உள்ள மீனம்பாக்கம் அருகேயுள்ள நபருடன் பேசியிருப்பது தெரியவந்தது. மேலும்., அந்த அலைபேசி எண்ணானது காரைக்காலுக்கு சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வித்யா காரைக்காலில் இருக்கும் கல்லூரியில்., பி.எஸ்.சி பயின்று வந்தது தெரியவந்தது. அங்கு இருந்த வித்யாவின் தோழியை கண்டறிந்து விசாரித்த சமயத்தில்., கல்லூரியில் பொறியியல் பட்டம் பயின்று வந்த மனோஜ் என்ற மாணவனை காதலித்து வந்ததும்., இவர்கள் இருவரும் தற்போது வரை காதலித்து வந்தது தெரியவந்தது.

தற்போது மனோஜ் மலேசியாவில் பணியாற்றி வந்த நிழலில்., கடந்த வியாழக்கிழமை மாலை மலேசியாவில் இருந்து சென்னை வந்ததும் தெரியவந்தது. பின்னர் அக்சயாவை விசாரித்ததை அடுத்து., வித்யாவை கடத்தவில்லை என்றும்., மலேசியாவில் அவருக்கு கணினித்துறை பொறியாளர் பணியில் அமர்ந்த இருப்பதாகவும்., கடலூரில் உள்ள காவல் நிலையத்திற்கு வருகை தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் காதல் ஜோடியை அழைத்து., சென்னையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சமயத்தில்., காதல் ஜோடிகள் முதலில் தங்களை காதலர்களாக அடையாளப்படுத்த மறுத்தாலும்., பின்னர் உண்மை வெளிவந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும்., வீட்டினை விட்டு வெளியேறினால் என்ன செய்வது என்று எண்ணி., நாடுகடந்து சென்று திருமணம் செய்து கொள்வோம் என்றும் முடிவு செய்துள்ளனர். மேலும்., கனடாவிற்கு சென்று திருமணம் செய்ய ஆகும் செலவிற்கான பணத்தை ரூ.14 இலட்சம் நிலத்தை விற்பனை செய்ததன் மூலமாக பெற்ற நிலையில்., மீதமுள்ள பணத்தை தந்தையிடம் வசூலிக்க கடத்தல் நாடகம் திட்டமிட்டது தெரியவந்தது.

இதுமட்டுமல்லாது பெண் கடத்தல் விவகாரம் என்பதால்., கடத்தல் கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவு இருந்ததாகவும்., நல்ல வேலையாக நாடக கடத்தல் கும்பல் தப்பித்துள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர்., நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.