இன்று உலக முதலுதவி தினம்.! முதலுதவி செய்வோம் உயிரிழப்பையும் தடுப்போம்..!

உலக முதலுதவி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் பல வகை ஊனத்தை  மட்டுமின்றி உயிரை காப்பாற்ற கூடிய முதலுதவி பற்றிய விவரத்தை இங்கு காண்போம்.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரை  மீட்டு அருகே இருக்கின்ற மருத்துவமனைக்கு தூக்கி செல்வதற்குள் நேரம் ஓடிவிடும்.

அந்த மாதிரியான நேரத்தில் செய்யப்படும் சிறிய முதலுதவிகள் மற்றவர்களின் வாழ்க்கையை ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. சாலைகளில் விபத்தில் சிக்கியவரை திரும்பி கூட பார்க்காமல் ஏதேனும் சிக்கல் வந்து விடுமோ என பயந்து சென்றால் ஒரு உயிர் போவதற்கு நம்மையறியாமல் நாமும் ஒரு பொறுப்பாகி விடுகிறோம்.
அல்லது அதன் மூலம் ஊனம் ஏற்பட்டால் அது அவர்கள் வாழ்க்கையின் கடைசி வரை ஒரு குறையாகவே இருந்து விடுகிறது. அப்படி விட்டு செல்லாமல் தக்க நேரத்தில் செய்யப்படும் முதலுதவி மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் ஒரு குச்சியை கட்டலாம், அப்படி குச்சி கிடைக்காதபட்சத்தில் புத்தகத்தின் அட்டையை வைத்து கூட கட்டுப் போடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

நமக்கு தெரிந்த அல்லது சாலையில் யாரோ ஒருவர் திடீரென்று உணர்வின்றி செயலிழந்து போனால் முதலில் அவரின் தோல்பட்டை தட்டி எழுப்பி கூப்பிட வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அந்த நபரை கிள்ளி உணர்ச்சி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

ஆபத்து காலங்களில் நாம் செய்யும் சிறு சிறு முதலுதவி கூட உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.