காவல்துறை அதிகாரி ஒருவரை இடித்துவிட்டு வாகனத்தை நிறுதாமல் தப்பிச் சென்ற சாரதியை தேடுதலில் பொலிஸார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை வாகன சாரதி ஒருவர் இடித்து தள்ளியுள்ளார்.

இச்சம்பவம் Grigny நகரில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் பின்னர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், வீதியில் வேகமாக பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் குறித்த மகிழுந்து சாரதி வாகனத்தை நிறுதாமல் அருகில் இருந்த காவல்துறை அதிகாரியை இடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

1:15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் பின்னர் மகிழுந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

ஆனால் சாரதியை கைது செய்ய முடியவில்லை. சில நிமிடங்களின் பின்னர் சாரதி ஓட்டிச் சென்ற மகிழுந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.