கன்னட திரையுலத்தில் மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த கே.ஜி.எப் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நான்கு நாட்களில் 100 கோடி வரை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.
கே.ஜி.எப் படத்தின் 2 ஆம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் தற்போது தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்காக கோலார் தங்க வயல் அருகே செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதையயடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது , கே.ஜி.எப். 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







