காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சிதம்பரத்துக்கு ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்தின் மனைவி!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார். சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது கைது குறித்து இது வரை வெளிப்படையாக எந்த கருதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்ட பேசிய லதா ரஜினிகாந்த், நடந்துள்ள சம்பவங்கள் வருத்தமாக இருக்கிறது கவலை வேண்டாம், சட்டத்தின் துணையால் உங்கள் கணவர் விரைவில் விடுதலையாவார் என ப.சிதம்பரத்தின் தற்போதைய நிலைக்கு வருத்தப்பட்டு ஆறுதல் கூறியிருக்கிறார். லதா ரஜினியின் இந்த ஆறுதல் பேச்சு அவரது உள்ளத்தில் இருந்து வந்தது என்றாலும் கூட ரஜினி சொல்லியே தான் நளினி சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார் லதா.

லதா ரஜினிகாந்தும், நளினி சிதம்பரமும் இருவரும் குடும்ப தோழிகள். லதா ரஜினியின் வார்த்தைகள் நளினி சிதம்பரத்துக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது என்கிறார்கள் சிதம்பரம் தரப்பினர்.