உடலுறவில் ஆண்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கருதுவது எது?

  • அதிகமாக இணையத்திலும் போர்ன் வீடியோக்களையும் பார்ப்பதால் உடலுறவில் சீராக இல்லாமல் பல பெண்களின் வாழ்வு அழிந்து விடுகிறது ! இது ஓர் உளவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல, நரம்பியல் பிரச்சனையும் கூட
  • கட்டாயப்படுத்தி எதையும் செய்தால் மன நோய்க்கு உள்ளாகிறார்கள் பெண்கள் ! இருவருக்கும் விருப்பப்பட்டே செய்தல் வேண்டும்
  • பெண்ணின் பண்பு இதமாக உணர்வுகளில் தொடங்கும் ! அவளுடைய உடல் அமைப்பு வேறு ரகம் ! ஆண்களின் அமைப்பும் மூளை, நிரம்பு, உடல் உணர்ச்சிகளும் வேறு வகை ! நன்றாக பேசி புரிந்து கொண்டால் பெண்களின் தேவைகளை அவர்கள் சொல்வார்கள் அல்லது அவர்களை கேட்க வேண்டும்
  • செல், கைப்பேசி, டிவி, லேப்டாப் படுக்கை அறையில் வைத்து அதையே பயன்படுத்தி உடல் வலு இழந்துவிட்டால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் வாழ்க்கை கசந்து விடும்
  • உடல் பயிற்சி , முக்கியமாக மண்ணில் ஏதாவது ஓர் பொழுதுபோக்கு. உதாரணம் : தோட்ட வேலை செய்தல் ரூட் சக்ரா எனப்படும் மூலாதாரம் வலுவாக இருக்கும் ! அப்பொழுது தான் பெண்ணை நன்றாக திருப்தி படுத்த முடியும்
  • போர்ன் வீடியோக்களில் போடப்படும் அனைத்துமோ இல்லையேல் விபச்சாரி விடுதிகளில் ஏற்பட்ட அனுபவமோ அல்லது அசாதாரண வகையிலான உடலுறவை மனைவியிடம் எதிர்பார்ப்பது , விபரீத எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற வகைகளில் நடந்து கொள்வது போன்றவற்றால் மனைவி பைத்தியமாக நேரிடும் ! குறைந்த பட்சம் விவாகரத்து !
  • இந்த சுகம் இரு பாலருக்கும் சொந்தம். இதை புரிந்து கொண்டால் நல்லது
  • பெண்களுக்கு உணர்வு ரீதியாக சுகமும் தேவையும் அதிகம் ! தாம்பத்திய முழுமையை விட அவர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கும் ! அதை தெரிந்து கொள்ளவும் ! உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை படுக்கை அறையில் புகழ்ந்து வருணித்து நடந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்

பின்குறிப்பு :

  • இவை அனைத்தும் என் மருத்துவ நண்பர்கள் , உளவியல் மற்றும் நரம்பியல் வல்லுநர்கள் , மனோ தத்துவ நிபுணர்கள் , ஜோதிடர்கள் வழியாகவும், ஆராய்ச்சிப் பதிவுகளிலும் புத்தகங்களிலும் படித்ததை கொடுத்துள்ளேன் ! அனாவசிய கேள்விகளையும் கருத்துக்களை பின்னூட்டமாக இடுவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன் !
  • உளவியலில் இது முக்கியமான பகுதி. தைரியமாக இதை பற்றி பெண்கள் தான் சொல்லவேண்டும் என்ற காரணங்களினால் மட்டுமே இந்த கேள்விக்கு விடை அளித்தேன்.