சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க..?
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்ல….
சோமு : ??
ராமன் : அவனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்புடா?
கோபால் : எப்படி சொல்ற?
ராமன் : உங்க வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்கறது உங்க பாட்டியாடான்னு கேட்டா, அவங்கதான் எங்க வீட்டு ரிஷப்சனிஸ்ட்ங்கறான்!
கோபால் : ??
கணவன் : டார்லிங், இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாது போல.
மனைவி : ஏன்?
கணவன் : கார்ல எவனோ ஸ்டியரிங், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச், பிரேக் எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான்.
மனைவி : தண்ணியடிச்சுருக்கியா?
கணவன் : கொஞ்சம் லைட்டா அடிச்சுருக்கேன்.
மனைவி : மூதேவி முதல்ல பின் சீட்ல இருந்து முன் சீட்ல போய் உட்கார்ந்து காரை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து தொல..
கணவன் : ??
கலா : என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்கு குறைவே இருக்காது….
மாலா : நிஜமாவா? அப்படி எங்க இருக்காரு?
கலா : ஏடிஎம் ல வாட்ச்மேனா இருக்காரு…
மாலா : ??