ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்!

துணையிடம் அவன் என்னும் ஆண்:

  1. ஆண் தோற்றுப்போவதை விரும்புவான் மனைவியிடம் அல்ல தன் மகளிடம்.
  2. அன்பால் ஆளுபவளிடம் முரடனும் அடிமையாகி விடுவான்.

தாயிடம் அவன் என்னும் ஆண்:

  1. தாயை தெய்வமாகவே நினைப்பான். அவளுக்கு மட்டும் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டான்.
  2. உன் அம்மாவா? நானா? என்று வீண் வாக்குவாதம் செய்தால் மன உளைச்சலும் வெறுப்புமே ஏற்படும் அவனுக்கு. தாயே எல்லாம் அவனுக்கு என்பதையே ஏற்றுக்கொண்டால் அவன் தாயின் ஸ்தானத்திலும் மேலாக அவளை வைத்துக்கொள்வான்.

அவன் என்னும் அவன்:

  1. வெளியிடத்தில் எத்தனை பெரிய ஆளுமை கொண்டிருந்தாலும் வீட்டுற்குள் தன்னை ஒரு பெண் ஆள வேண்டும் என்று ஏங்குவான்.
  2. மகளின் சொல் மந்திர சொல் தான். மாற்று கருத்தே இல்லை.
  3. பெண்களை ஒரு போதும் விட்டு கொடுக்க தெரியாது எந்த ஒரு ஆணுக்கும். பெண்ணை பெண்களை விட அதிகம் மதிப்பதென்னவோ ஆண் தான்.
  4. பெண்ணை பூவாக காண்பிக்க தன்னை முரடனாக அறிமுகம் செய்து கொண்ட கலைஞர்கள் ஆண்கள். பெண்ணை மென்மையானவள் என்று அறிமுகப்படுத்துவதே ஆண்கள் தான்.
  5. 100 கிலோ எடையை தூக்க தெரிந்தாலும், 2 கிலோ எடை கொண்ட பிறந்த குழந்தையை கையிலேந்த பயப்படும் குழந்தைகள் அவர்கள்.
  6. எளிதில் புரிந்து கொள்ள கூடிய பதில்கள் ஆண்கள். ஆனால் இவர்களால் புரிந்தே கொள்ள முடியாத கேள்விகள் தான் பெண்கள்.

காதலில்/காதலியிடம் அவன்:

  1. சட்ட சிக்கல்களை தீர்க்க தெரிந்திருந்தாலும் காதலிக்கும் பெண்ணிடம் சிக்கி தவிப்பான். காதலிக்க தொடங்கிவிட்டால் அவன் உலகமே அவளாகிவிடுவாள்.
  2. காதலிக்க ஆரம்பித்த பின் ஐஸ்வர்யாராயும் அவன் காதலியின் அழகில் பாதியாக கூட அவன் கண்களுக்கு தெரிவதில்லை.
  3. தன்னை முதன் முதலில் ரசிக்க ஆரம்பிப்பான் காதலி ஒருத்தி வந்தாள். வீட்டில் கடலை மாவும், தக்காளியும் அவ்வப்பொழுது காணாமல் போகும். அவள் வருகைக்கு பின்.
  4. உடல் நலம் பேணுவான். கண்டிப்பாக ஜிம் வாசலிலே போய் படுத்துக்கொள்வான். 10 மணி வரை தூங்கும் அவனை காலை நான்கு மணிக்கே எழுப்பிவிட செய்யும் இந்த காதல்.
  5. உட்கார்ந்த இடத்திலே சாப்பிட்டு பழகிய அவன் இப்பொழுது எல்லாம் அம்மாவுடன் சமையலறைக்குள் தஞ்சம் புகுந்திருப்பான். சமையலறைக்குள்ளும் இழுத்து சென்றிருக்கும் அவன் காதல்.
  6. தங்கையிடம் சண்டை போட்டே பழகிய அவனுக்கு இப்பொழுதெல்லாம் தங்கை முதல் குழந்தையாகவே தெரிவாள்.
  7. குழந்தைகளை ரசிக்க ஆரம்பித்திருப்பான். அவனுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் எட்டி பார்க்க ஆரம்பித்திருக்கும்.

உறவுகளில் அவன்:

  1. ஊர் சுற்றும் அவனை வீட்டிற்குள்ளாகவே கட்டி போட்டு விடும் அக்கா மகளின் மழலை பேச்சில் வரும் மாமா என்னும் மந்திர சொல்.
  2. 110ல் பறக்கும் அவன் வண்டி அண்ணன் மகன் வருகைக்கு பின் 30யை தாண்டியிருக்காது. தான் காணாத உலகை தன் மகன் காண வேண்டும் என்று தோளிலே தூக்கி செல்வான்.
  3. மனைவியை வீட்டை விட்டு அனுப்பாத அவன் மகளை உலகமெங்கும் கூட்டி செல்வான். கிரிக்கெட் Ground-க்கு இப்பொழுதெல்லாம் மகளுடனே செல்ல தொடங்கியிருப்பார் முழு அப்பாவாக பொறுப்பேற்ற பின்னர்.
  4. எப்படி தான் இப்படியெல்லாம் மாறுகிறார்களோ என்று என்ன தோன்றும். அன்பால் மட்டுமே அந்த முரடர்களை ஆள முடியும். அது மனைவியை விட மகள்களுக்கு நன்கு தெரியும்.
  5. மகள் வீட்டில் வேலை செய்யவதை விரும்பவே மாட்டார். என் புள்ள எவனோ ஒருத்தன் வீட்ல போய் வேலை செய்ய தான போகுது? நீ செய்யேன் என்று அம்மாவிடம் நமக்காக போராடும் நல்ல ஒரு வக்கீல்.
  6. ப்பா உன் பொண்டாட்டி தொல்லை தங்க முடியல பேசாம ஒரு சித்தி ஓகே பண்ணிருவோம்ப்பா என்று விளையாட்டுக்கு சொன்னாலும், உன் அம்மாவால மட்டும்தான்மா என் கூட எல்லாம் காலம் தள்ள முடியும் மத்த ஒருத்தினா எப்பவோ ஓடிருப்பா என்று தன் காதல் மனைவியை மகளிடமும் விட்டுக்கொடுக்காமல் பேசும் ஒரு அழகான கணவன்கள் அவர்கள். (நேசிப்பவர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க தெரிந்திராத நேர்மைவாதிகள்).
  7. என்னைக் கேட்டால் பெண்களின் வெற்றிக்கு பின்னாடி ஒளிந்திருப்பது ஆண் தான். தோளில் தூக்கி வைத்து ஒரு படத்தை வீட்டில் ஆணியில் மாட்ட வைத்திருப்பார் தந்தை. நான் தான் மாட்டுனேன் நான் தான் மாட்டுனேன் என்று மகிழ்ச்சியுடன் கூறும் மகளின் வெற்றியை, ஆமாம்மா என் புள்ள தான் மாட்டியது என்று கொண்டாடி தீர்ப்பார். (பிடித்தவர்களுக்கு சந்தோசத்தை பரிசளிப்பதில் கை தேர்ந்தவர்கள்)
  8. 8ல் தொடங்கிய நட்பை 80 வரை நீட்டிற்கும் கடைசி வரை துணை வரும் நல்ல நண்பர்கள். நட்பிற்கு இலக்கணம் இவர்களால் எழுதப்பட்டதே என்றால் மிகையல்ல.
  9. தோழமை என்று வருகையில் இவர்களுக்கு இணை ஏதும் இல்லை. சாலையை கடக்கும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையை ஒரு வார்த்தையில் சொல்லி மாளாது. பேருந்து ஏற்றிவிட்டு வீடு போய் சேரும் வரைக்கும் 10 கால் ஆவது செய்துவிடும் பாசக்காரர்கள். அக்கறை எடுத்துக்கொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.
  10. பிடித்த மங்கையிடம் மயங்கியே நிற்பான். என்ன சாகசம் செய்தாலும் தான் ஒரு ஆண் என்பதை அவளிடம் நிரூபித்து விட வேண்டும் என்ற போராட்ட குணத்தில் சற்றும் இறங்கி வர முடியாதவர்கள்.
  11. ஆண்களை பற்றிய உளவியல் உண்மையில் மிக முக்கியமான ஒன்று அன்புக்கு கட்டுப்படும் அரக்கர்கள். மொத்தத்தில் பாசக்காரர்கள். அது அண்ணனோ, தம்பியோ, அப்பாவோ, கணவனோ, தோழனோ.
  12. பெண்கள் பற்றி வரும்போது மிக பொறுப்பாக செயல்படுவார்கள்.
  13. பிடித்தவர்களின் பாதுகாப்பில் சமரசமே செய்துகொள்ள மாட்டார்கள். அது 12 மணியோ 2 மணியோ கூடவே இருந்து அடுத்த பேருந்திலேனும் ஏற்றி விட்டு தான் செல்வார்கள்.

தன்னை கெட்டவன் போல் காட்டிக்கொள்ளும் நல்லவர்கள்.

பெருசா மன வலிமை எல்லாம் கிடையாது, ஒரு பெண்ணின் அழுகையை கூட தாங்கி கொள்ள முடியாது இவர்களால்.

இவர்களை மாற்றுவது வெகு சுலபம். ஒன்று இவர்கள் யாரையாவது நேசிக்க வேண்டும் அல்லது இவர்களை யாராவது நேசிக்க வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாலும் தலைகணம் எதுவும் இன்றி தலையாட்ட தொடங்கிவிடுவார்கள்.

இவர்களின் தேவை எல்லாம் ‘அவள்’ அவ்வளவே தான்.