சுவையான பாசிப்பருப்பு அடை செய்வது எப்படி??

‘பாசிப்பருப்பை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும், இது தாய்மார்களுக்கு மிகவும் நல்லது’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாசிப்பருப்பு,வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் உண்டாவதை தடுக்கும். குறிப்பாக, ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.  இப்பொழுது, பாசிப்பருப்பு, முருங்கை கீரை அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – 1 கப்,
பாசிப்பருப்பு – 2 கப்,
இஞ்சி- 1 துண்டு,
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
கடூகு,
சீரகம்,
கடலைப்பருப்பு
எண்ணெய், உப்பு

செய்முறை :

பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்சியில் சற்று பொரபொரப்புடன் இருக்குமாறு அரைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை லேசாக வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, பின், சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சிறிய அளவிலான அடைகளாக ஊற்றி சூடாக சாப்பிடவும்.

மாலை உணவுக்கு மிகவும் அற்புதமானது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். இதனால், செரிமான கோளாறு ஏற்படக்கூடும்.