சுவையான தூதுவளை தோசை செய்வது எப்படி..!!

தேவையான பொருட்கள் :

இஞ்சி, மிளகாய் விழுது – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப
இட்லி அரிசி – 1 கப்
தூதுவளை கீரை – அரை கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – அரை டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

முன்பே அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவு சேர்க்க வேண்டும்.

பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.