தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது, மேலும் அவை மற்ற உணவுகளையும் பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட ஊட்டமாகவே இருக்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டால், ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சிசுக்களை காப்பாற்ற முடியும், மேலும் பல மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக மேம்படும்.
தாய்ப்பாலுக்கு மாற்றாக, குழந்தைகளுக்கு பால் பவுடர், அல்லது மிருகங்களின் பால் போன்றவை தருவதால் சிசுக்களின் ஆரோக்கியம் பாதிப்படையலாம். இந்த பாதிப்பு குறிப்பாக தேவையான அளவு விலை உயர்ந்த, மாற்று உணவுகள் வாங்கி தர முடியாத, அல்லது இவைகளை தயார் செய்வதற்கு எப்பொழுதும் சுத்தமான குடிநீர் பெற இயலாத குடும்பங்களில் அதிகமாக காணப்படுகிறது.
பெரும்பான்மையான தாய்மார்களினால் தாய்ப்பால் நிச்சயமாக ஊட்டமுடியும். தாய்ப்பாலூட்டுவதற்கு தைரியமில்லாத பெண்களுக்கு, கணவர், குடும்பத்தார், நண்பர்கள், மற்றும் உறவினர்களின் ஊக்கமும், நடைமுறை ஆதரவும் தேவை. சுகாதார துறையின் அலுவலர்கள், பெண்களுக்கான அமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் முதலாளிகளும் இதற்கு ஆதரவு தரலாம்.
தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த தகவல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், மேலும் இந்த தகவலை தெரிவிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
ஒவ்வொரு குடும்பமும், சமூகமும் தாய்ப்பால் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு மற்றும் பானமாகும். வேறு எந்த உணவோ, பானமோ, ஏன் தண்ணீர் கூட இந்த காலகட்டத்தில் சிசுவிற்கு தேவையில்லை.
- ஹெச் ஐ வீ யால் பாதிக்கப்பட்ட பெண், தாய்ப்பால் மூலம் சிசுவிற்கு வியாதியயை தொற்றுவிப்பதற்கான அபாயம் உள்ளது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களும் அல்லது பாதிக்கப்பட்டிருப்போமோ என்று சந்தேகமுள்ள பெண்களும், தேர்ச்சிபெற்ற சுகாதார பணியாளரிடம் ஆலோசனையைப் பெற்று கொள்ள வேண்டும். இதற்கான சோதனை முறைகள், பரிந்துரைகள், மற்றும் சிசுவிற்கு இது பரவுவதை தடுப்பதர்கான வழிகள் ஆகியவற்றை பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- பிறந்த குழந்தையை தாய்க்கு அருகிலேயே வைத்திருந்து, பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும்
- அடிக்கடி தாய்ப்பாலூட்டினால் பால் அதிகமாக சுரக்கும், இதனால் எல்லா தாய்மார்களும் வெற்றிகரமாக தாய்ப்பாலூட்ட முடியும்.