தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான்.. அமைச்சர் பேட்டி!!

தூத்துக்குடி மாவட்டம் திருமலாபுரத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்துகொடார். அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியவை, வெளிநாடு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் நாளிலே மருத்துவ சேவைக்காக 3 புரிந்தணர்வு ஒப்பந்தங்களை கையெழுதிட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

திமுக ஆட்சிகாலத்தில் செய்ய தவறிய அனைத்தையும், தற்போது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தி வருவதால், அதனை பொறுத்துக்கொள்ளாமல் முதலமைச்சரின் பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுவது எதிர்கட்சி தலைவருக்கு அழகல்ல என்று கூறினார். தமிழகத்தின் வாழ்வதார பிரச்சனை, ஆட்சியில் இருந்தவர்கள் விட்டு சென்ற உரிமைகளை மீட்டெடுத்த இயக்கம் அதிமுக தான் என்றும், தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.