மீண்டும் களமிறங்கும் அம்பதி ராயுடு!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தன்னுடைய முடிவை திரும்ப பெறுவதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

2019 உலகக் கோப்பைக்கு புறக்கணிக்கப்பட்ட பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பதி ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்.சி.ஏ) நிர்வாகிகள் குழுவின் (கோ.ஏ) உறுப்பினர்களில் ஒருவரான பி.சி.சி.ஐ.யின் பேராசிரியர் ரத்னக்கர் ஷெட்டிக்கு விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட தயாராக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓய்வில் இருந்து வெளியே வந்து அனைத்து வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன்.

“சென்னை சூப்பர் கிங்ஸ், வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் நோயல் டேவிட் (அடுத்த மாதம் விஜய் ஹசாரே கோப்பை வரை எச்.சி.ஏ தேர்வுக் குழுத் தலைவர்) ஆகியோர் கடினமான நேரத்தில் மிகவும் ஆதரவாக இருந்தனர். மேலும் என்னிடம் போதுமான கிரிக்கெட் உள்ளது என்பதை எனக்கு உணர்த்துவதில் கருவியாக இருந்தனர்” என அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திறமையான ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் ஹைதராபாத் அணியுடன் இணைந்து கொள்ள தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.