ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!!!

ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் கல்கிசை , கடவத்தை பகுதிகளில் இயங்கிவந்த விபச்சார விடுதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றிவளைக்கப்பட்டதில் ஆண் ஒருவர் உள்ளடங்கலாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்கி வருகின்றமை தொடர்பில் மேல்மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் கல்கிசை பொலிசாருக்கும் இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றது.

அதற்கமைய மஹர மற்றும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது கடவத்தை – கண்டி வீதி , கிரிபத்கொடை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் அதன் முகாமையாளராக கடமையாற்றிய ஆணொருவர் உட்பட , விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 04 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கெபித்திகொல்லாவ , யக்கல , எப்பாவல , பரவகும்புக்க , தெல்வத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளவயதுடையவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் , கடவத்தை – கிரில்லவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விபச்சார விடுதியின் முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணெருவரும் , விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் கணேமுல்ல , மொல்காவ ஆகிய பகுதிகளை சேர்ந்த , 34 வயதுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறாக கல்கிசை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியின் முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ , சோலேவௌ ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 , 24 மற்றும் 31 வயதுடையவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.