ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது திடீரென அங்கு வந்த வாலிபர் ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் பார்த்தார்.
நேற்று அவர் வயநாட்டில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு இருந்ததால், அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக, அவரது கார் நிறுத்தப்பட்டது.
அப்போது, காரை நெருங்கிய ஒரு வாலிபர், காரில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியுடன் கைகுலுக்கினார்.
திடீரென பாய்ந்து, ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள், அவரை பின்னால் இழுத்தனர்.
எதிர்பாராத இந்த நிகழ்வுக்கிடையே, ராகுல் காந்தி வழக்கம்போல் புன்னகைத்தபடியே பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கிளம்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
: