1978ல் “அவள் ஒரு பச்சைக் குழந்தை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் S.A. சந்திரசேகர். அதன் பின் நடிகர் விஜயகாந்த்தை வைத்து தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை இயக்கினார். அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் S.A. சந்திரசேகர்.
இவர் தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் தளபதி விஜய் அவர்களின் தந்தை. இவர் தற்போது அபிராமி ராமநாதன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, ரஜினியைப் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
“சத்தம் ஒரு இருட்டறை”, “நெஞ்சில் துணிவிருந்தால்”, “நான் சிகப்பு மனிதன்”, “நிலவே மலரே”, “ராஜநடை”, “நாளைய தீர்ப்பு”, “செந்தூரபாண்டி”, “ரசிகன்”, “ஒன்ஸ் மோர்” போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் S.A. சந்திரசேகர்.
இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், சத்தியராஜ், சீமான், விஜய் போன்ற நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான “டிராபிக் ராமசாமி”படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதனின், 72வது பிறந்த நாள் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நிறைய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அபிராமி ராமநாதனை வாழ்த்தினார்கள்.
இதில் கலந்துகொண்ட விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, “தமிழன் எங்கு சென்றாலும் அவனுக்கு பெருமை தான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான். மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.
தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்” என்று உணர்ச்சிவசப் பட்டு பேசினார். S.A. சந்திரசேகர் பேசியது ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி வெளி மாநிலமான கர்நாடகாவை சேர்ந்தவர்என்பதால் எஸ்ஏசி.யின் இந்த பேச்சு தமிழக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் அரசியலில் இறங்கும் நோக்கில் பல நற்பணிகள் ஆற்றி வருகிறார். அதனால் விஜய்யை ஆதரித்து ரஜியை அவர் எதிர்ப்பதாக பலரும் கூறிவருகிறார்காள்.
யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். ஆனால் அவர்களது ரசிகர்கள், S.A. சந்திரசேகர் பேசியதற்கு எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.