திருமாவளவன்-ஈழதமிழர்கள் இடையில் உண்மையிலே என்ன நடந்தது????

லண்டனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டகூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது தொடர்பான உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட திருமாவளவன். அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் பணம் தானே? எடுத்துக்கொள் என்று வீசி எறிந்து கடுமையாக நடந்து கொண்டதாகவும் செய்திகளுடன் வீடியோ வெளியானது.

ஆனால், கூட்டத்தில் திருமாளவன் நிதியுதவியே கேட்டக்கவில்லை என்றும், அங்கிருந்தவர்கள் சலசலப்பில் ஈடுபட்டதற்கான காரணமும் தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூட்டணி அமைத்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய திருமாவளவன், 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், தொலைபேசியில் என்னிடம் பேசிய விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார்.

நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள். தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.

அப்போது அவர் அருகில் இருந்த இருவர் உடனடியாக எழுந்து திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டதுடன், வரவேற்பு துண்டு காகிதத்தையும் கிழித்து வீசினர் அரங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவந்துள்ளது.