தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்ற கட்சியில் இணைந்து வருவது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து பிற கட்சிக்கு தாவியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமமுக திருப்பூர் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமமுகவின் மாநில தேர்தல் பிரிவு இணை செயலாளரும், திருப்பூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், நாடாளுமன்ற சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.திருப்பூர் சிவசாமி உட்பட 500 பேர் அமமுகவில் இருந்து விலகி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உடன் இருந்தார்.