சிறார் குற்றவாளியுடன் ஒரே சிறையில் இருந்த நபர் செய்த செயல்!

பிரித்தானியாவில் சிறை அறையில் தன்னுடன் இருந்த சிறார் பாலியல் குற்றவாளியை நபர் ஒருவர் அடித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wakefield சிறையிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 49 வயதான Darren Osborne, சிறார் பாலியல் குற்றவாளி 35 வயதான Tariq Islam-மை அடித்து கொல்ல முயன்றுள்ளார்.

நான்கு குழந்தைகளுக்கு தந்தையான Osborne, மசூதிக்குள் காரால் மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், ஒருவர் கொல்லபட்டார், 12 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வழக்கில் Osborne கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அவருடன் இருந்த Tariq Islam 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறைியல் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, சத்தம் கேட்டு சிறைகாவலர்கள் சென்று பார்த்த போது, Islam-மை Osborne சரமாரியாக தாக்கிக்கொண்டிருந்துள்ளார்.

சிறது தாமதம் ஆகியிருந்தாலும் Islam கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்ற Islam-மை அதிகாரிகள் வேறு சிறைக்கு மாற்றியுள்ளனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில், Osborne இடமாற்றம் பெற ஆசைப்பட்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் சிறைச்சாலை உள்ளவர்கள் கூறுகின்றனர்.