இன்றைய ராசிபலன் (27/08/2019)

  • மேஷம்

    மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மாலை 5 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

  • கடகம்

    கடகம்:  குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள், செலவு களால் திணறுவீர்கள். சகோதரவகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறை முக எதிர்ப்புகள் வந்து செல்லும். மாலை 5 மணி முதல்ராசிக்குள் சந்திரன் நுழை வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ
    கத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன் மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கன்னி

    கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

  • துலாம்

    துலாம்: திட்டமிட்ட காரியங்கள்கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்கவேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மகளுக்கு நல்லவரன் அமையும்.புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத் தில் அதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: கனிவாகப் பேசி காரியம்  சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை
    கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். பரிசு, பாராட்டு கிடைக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக் கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்
    களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.