மூன்று யுவதிகள் உட்பட 8 பேர் அதிரடியாக கைது!

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் காவல்துறை அதிரடிப்படையால் நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும், மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியை சுற்றிவுள்ள பகுதிகளை சேர்ந்த இவர்களிடமிருந்து 795 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 354 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 4 ஆயிரத்து 540 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.