பிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார், கவீன். அதன்பின் சாக்‌ஷி இடையில் வர பிக்பாஸ் வீடே ரணகளமானது.

அது மிக பெரிய அளவில் வெடிப்பதற்குள் சாக்‌ஷி எலிமினேட் ஆனார். இதனால் மீண்டும் ஒன்றான கவீன்- லொஸ்லியா நட்பிற்கு சேரன் குறுக்கே வர அவரை எப்படியோ ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவீன் எப்போதும் உடுத்துகின்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டை நேற்றைய எபிசோடில் லொஸ்லியா உடுத்தியுள்ளார். இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என அவர் செய்துள்ளார். ஆனால் கழுகாக பிக்பாஸை பார்த்துவரும் நெட்டிசன்ஸ் இதை கண்டுப்பிடித்துவிட்டனர்.