கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் – லொஸ்லியாவின் ரொமான்ஸ் தான் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் ரசிகர்கள் இதன் காரணமாக மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சாக்ஷி மற்றும் அபிராமி சென்றதில் இருந்து கவின் எந்த எந்த நேரமும் லாஸ்லியா பின்னாடியே சுற்றி வருவதும், அதற்கு லாஸிலியாவும் ஒத்து ஓதுவதும் சகிக்க முடியவில்லை என குமுறுகின்றனர்.
எந்த நேரமும் கவினுடன் ஒட்டிக்கொண்டு எதையாவது பேசிக்கொண்டு இருக்கின்றார். மேலும் கார்டன் ஏரியாவில் இருவரும் சென்று இரவில் தனித்து பேசிக்கொண்டு இருப்பதும், அரட்டை சிரிப்பு என காதலை வெளிப்படுத்தி வருகின்ற்னர்.
இந்த நிலையில், நேற்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கவினிடம் லொஸ்லியா இதுவரை தனது பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்டியதில்லை என கூறி கொண்டு இருந்தார். மேலும், ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் கடைசியாக அவரது நண்பர் ஒருவர் லாசலியாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதாக குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது லொஸ்லியா கூறியது பொய் என ஆதாரத்துடன் நிரூபணம் ஆகி இருக்கின்றது. லாசலியா கடந்த 2017 ஆம் ஆண்டில் தன்னுடைய 21வது பிறந்தநாளை கொண்டாடிய லொஸ்லியா, தன்னுடைய நண்பர்கள் உடன் சேர்ந்து கேக் வெட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்க்கும் அனைவரும், எதுக்கு இப்படி கேவலமா பொய் சொல்லி மாட்டிக்கணும், என நெட்டிசன்ஸ் லொஸ்லியாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.






