இணையத்தில் லீக்கானது பிகில் படத்தின் பாடல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில். இதன் படப்பிடிப்பு 2 மாதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார். மேலும் விஜய் பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படகுழுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இப்படத்தில் முதன் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.