அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! திமுகவுடன் கைகோர்க்க போகும் அதிமுக எம்.எல்.ஏ.!

மதுரை திருநகரில் உள்ள சவிதா பாய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீடு கட்டும் கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ராதிகா, அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியவை, பால் விலையை உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தது திமுக தான். பால் கொள்முதல் செய்பவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டுதான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அஞ்சல் துறையாக இருந்தாலும், ரயில்வே துறையாக இருந்தாலும் இந்தி மொழி திணிக்கப்படுமேயானால், இதனை உடனடியாக எடுத்துக் கூறி மத்திய அரசு திரும்பெறும் நிலையை தமிழக அரசு உருவாக்கும்.

மழைநீர் சேகரிப்பு திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் இதனை செயல்படுத்துவதில் மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. பள்ளிக் கட்டிடம் அரசு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து வருகிறேன். அரசிடம் எந்தத் துறை அமைச்சர் பதவியையும் கேட்கவில்லை. முதலமைச்சர் நினைத்தால் வாய்ப்பு கொடுக்கலாம். அதற்கான சூழ்நிலை உருவானால் வாய்ப்பு கொடுக்கலாம்.

என்னை போல பல பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. எம்எல்ஏ பதவியில் இருந்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன். எங்களுடைய நோக்கம் பொது பணியாற்றிய வேண்டும் என்பதுதான். திருப்பரங்குன்றம் தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், முக்கிய கோரிக்கைகள் இருந்தால் திமுக எம்.எல்.ஏ. சரவணனோடு இணைந்து, போராட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.