அரசு அரசாணை சென்னைக்கு இனிப்பான செய்தி!

சென்னை மாநகரத்தில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு 2371 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று முக்கிய நதிகளையும் சுத்தமாக்கும் முயற்சியில், கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், கழிவுநீருக்கு மாற்று வழிகள் அமைத்தல் பணிகளுக்காக 2371 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் அறிவிப்பிணை அடுத்து, சென்னையில் தற்போதுள்ள கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பிக்கவும், வலுப்படுத்தவும் செயல்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை சீரமைப்பு பணிகள் நடைபெறும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தினமான இன்று சென்னை நதிகளை தூய்மை படுத்த அரசாணை வெளியாகியிருப்பது இனிப்பான செய்தி தானே!