மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நல்லசோப்ரா என்ற பகுதியில் வசித்து வரும் சுனில் மற்றும் பிறனாளி என்ற தம்பதி ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து 2011ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சந்தோசமாக வாழ்ந்த இவர்களின் வாழ்க்கையில் சில மாதங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக இருவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல இவர்கள் தொடங்கிய சண்டையானது காலை 5 மணி வரை நீடித்துள்ளது. ஒருவரை ஒருவர் மிகவும் தகாத வார்த்தைகளினால் திட்டி கொண்டு சண்டையிட்டனர். இதன்காரணமாக அதிதீவிரமான சண்டை இறுதியில் ஒரு துயர சம்பவத்துடன் முடிந்துள்ளது.
அதாவது அதிகப்படியான கோபத்தினால் ஆத்திரமடைந்த ப்ரணாலி சமையலறைக்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருக்கும் காய்கறி வெட்டும் கத்தியை மறைத்து எடுத்து வந்து கணவனிடம் சமாதானம் பேசுவதை போல ஆசையாக நெருங்கியுள்ளார். இதன் காரணமாக சுனில் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவரை நெருங்கியுள்ளார்.
ஆனால், ப்ரணாலி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து பதினோரு முறை அவரை கத்தியால் குத்தியதால் கணவர் நிலைகுலைந்துள்ளார். அப்போதும் ஆவேசம் தாங்காமல் கணவனை கட்டியணைத்துக் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கின்றார்.
தன்னுடைய மாமனார், மாமியாரிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ப்ரணாலி தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் தங்களது மருமகளின் பேச்சை நம்பாமல் காவல்துறையை நாடினர். காவல்துறையில் தீவிர விசாரணையில் இது கொலைதான் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சுனிலின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.






