உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோரக்பூர் என்ற கிராமத்தில் ராஜேஷ் பால் என்பவரின் மனைவி சீமா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் பால் என்பவரை கள்ளக்காதல் புரிந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜேஷிடம், நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை நான் உமேஷ் பாலுடன் சென்று விடுகிறேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த விஷயம் பஞ்சாயத்து வரை வந்துள்ளது .பின்னர் பஞ்சாயத்திலும் சீமா நான் எனது கணவருடன் வாழ விரும்பவில்லை உமேஷ் பாலுடன் செல்லவே விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ராஜேஷும் உன்னுடைய விருப்பப்படியே செய். ஆனால் உனது காதலன் அவன் வளர்க்கும் 71 ஆடுகளை எனக்கு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
சீமாவின் கள்ளக்காதலனும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளான். இதனை தொடர்ந்து அவரது கொட்டகையிலிருந்த 71 ஆடுகளை ராஜேஷிடம் உமேஷ் ஒப்படைத்துவிட்டு, அவரது மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனாலும், உமேஷின் அப்பாவை நான் வளர்த்த ஆடுகளை எனது அனுமதி இல்லாமல் எப்படி நீ அவனுக்கு கூட சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக உமேஷின் தந்தை காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்துள்ளார்.
“ராஜேஷ் அவரது மனைவி அழைத்துச் செல்லட்டும். எனக்கு எனது ஆடுகள் வேண்டும்.” என தெரிவித்துள்ளார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் இறுதியாக ரமேஷ் பாலை அழைத்து அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர், “ஆடுகளை கொடுத்துவிட்டு தானே மனைவியை அழைத்துச் சென்றார்கள். நான் என்ன திருடினேனா?” என என கேட்க,
பின்னர்,” ராஜேஷ் ஆடுகளை திருடவில்லை உங்களுடைய மகன் தான் கொடுத்துள்ளான். அதனால், ராஜேஷை எங்களால் தண்டிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும், உமேஷ் மற்றும் சீமைவை அழைத்து விசாரிக்க கணவருடன் சீமாவை அனுப்பி விட்டு அந்த ஆடுகளை திரும்பப்பெற முனைந்துள்ளார். ஆனால் சீமாவோ அவரது குழந்தை எனது வயிற்றில் இருக்கின்றது. என்னால் ரமேஷுடன் செல்ல முடியாது.” என அடம்பிடித்து உமேஷுடன் வீடு திரும்பியுள்ளார்.






