அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் காருக்குள் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த ராபர்ட்சன் லாரன்ஸ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவருடைய 22மாத மகள் Milliani, அத்தை மற்றும் மாமாவின் பொறுப்பில் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் இருவரின் அலட்சியத்தால் 92 டிகிரி வெப்பத்தில் 8 மணி நேரமாக குழந்தை காருக்குள் இருந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து பேசிய லாரன்ஸ், எனக்கு முதலில் போன் வந்த போது நகைச்சுவை செய்வதாக நினைத்தேன். ஆனால் உண்மை என தெரியவந்த பிறகு என் மனம் முழுவதும் உடைந்துவிட்டது எனப்பேசியுள்ளார்.
பின்னர் குழந்தையின் அத்தையிடம், “நீங்கள் 2 வயது குழந்தையை மறந்துவிட்டு எட்டு மணி நேரம் என்ன செய்தீர்கள்? என லாரன்ஸ் ஆவேசமடைந்துள்ளார். நீ என் மகளை கொன்றுவிட்டாய். அவளை என்னிடமிருந்து பிரித்துவிட்டாய் என கதறி அழுதிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே மிசிசிபி மாகாணத்திலும் இதேபோன்று ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. 21 மாத ஆண் குழந்தையை மழலையர் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்து கொண்டு பெற்றோர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டனர்.
மாலை 5 மணியளவில் அலுவலத்தை சேர்ந்த ஒருவர் காரில் பல மணி நேரமாக குழந்தை இருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.
ஆனால் 93 டிகிரி வெப்பத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகினர்.
KidsandCars.org. அறிக்கையின்படி, அமெரிக்காவில் நடப்பாண்டில் மட்டும் காரில் தனித்துவிடப்பட்டு 35 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். கடந்த ஆண்டு 52 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






