வீட்டில் இருந்த கர்ப்பிணி பெண்! திருநங்கைகள் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்….

இந்தியாவில் கர்ப்பிணி பெண் மற்றும் அவர் கணவரிடம் பணத்தை திருடி கொண்டு ஓடிய திருநங்கைகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியுடன் வீட்டில் இருந்தார்.

அப்போது அவர்கள் வீட்டுக்கு வந்த சில திருநங்கைகள் தங்களுக்கு பணம் வேண்டும் என கேட்டனர்.

இதையடுத்து கர்ப்பிணி பெண் ரூ 2100 கொடுத்தார், ஆனால் தங்களுக்கு ரூ 21000 வேண்டும் என திருநங்கைகள் கேட்டனர்.

இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணிடம் இருந்த பர்ஸை திருநங்கை திடீரென பறித்தார், இதோடு இன்னொரு திருநங்கை கர்ப்பிணியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்று அது முடியவில்லை.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண் கத்த தொடங்கியதால் திருநங்கைகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இது தொடர்பாக கர்ப்பிணி பெண்ணும் அவர் கணவரும் பொலிசில் புகார் கொடுத்துள்ள நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.