வரும் வெள்ளியன்று தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு!! – பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள ‘சாஹோ’ படம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ‘சாஹோ’ படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் நாயகன் பிரபாஸ் கலந்துகொண்டு பேசியதவது.

பாகுபலி படம் வெளி வந்த பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் ‘சாஹோ’ இயக்குனர் சுஜீத் என்னை விடவில்லை. அதுபோக ‘சாஹோ’ படத்தில் நடித்து முடிக்கவும் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொண்டது. ஏனென்றால் இந்த படத்தின் காட்சிப்படுத்தல் அப்படி பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதற்க்காக தான் இரண்டரை வருடங்கள் தேவைபட்டது. இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக வெளிவந்திருக்காது.

‘சாஹோ’ படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அது நம் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும். எனக்கு நேரடியாக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் ஆசை. அது கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். வரும் வெள்ளி அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி தமிழ் ரசிகர்களுக்காக ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது என பிரபாஸ் தெரிவித்தார்.