இளம்பெண்ணிடம் நிர்வாணப்படங்கள் கேட்ட நபர்!

ட்விட்டரில் ஒரு இளம்பெண்ணிடம் ஒரு நபர் அவரது நிர்வாணப்படங்களை அனுப்பும்படி கேட்க, பதிலுக்கு அந்த இளம்பெண் அனுப்பிய படம் வைரலானது!

கிளாஸ்கோவைச் சேர்ந்த Lash என்னும் இளம்பெண்ணிடம் அவரை பின்தொடர்பவரான ஒரு இளைஞர், தான் அவருக்கு 30 பவுண்டுகள் அனுப்புவதாக தெரிவித்திருக்கிறார்.

Lash அவரிடம், எனக்கு எதற்கு பணம் அனுப்புகிறீர்கள், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, உனது நிர்வாணப்படங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார் அந்த நபர். சரி, நீங்கள் பணம் அனுப்புங்கள், நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார் Lash.

அதன்படி அந்த நபர் Lashக்கு 30 பவுண்டுகள் அனுப்ப, புகைப்படம் ஒன்றை பதிலுக்கு Lash அனுப்ப, அந்த செய்தி வைரலானது. அப்படி அவர் என்ன அனுப்பினார் தெரியுமா?

பணத்தைப் பெற்றுக்கொண்ட Lash நேராக சைனீஸ் உணவகம் ஒன்றிற்கு சென்று, சிற்றுண்டி ஒன்றை வாங்கினார்.

அதை புகைப்படம் எடுத்துவிட்டு, நன்றாக சாப்பிட்டார். பின்னர் அந்த புகைப்படத்தை, தன்னிடம் நிர்வாணப்படங்கள் கேட்டவருக்கு அனுப்பி வைத்தார்.

ட்விட்டரில் அவர் இந்த செய்தியை பதிவேற்றம் செய்ய, 9,400பேர் அதற்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

அத்துடன் நிர்வாணப்படம் கேட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தீர்கள், அருமை என Lashஐ பலரும் பாராட்டியுள்ளார்கள்.