முத்தத்தால் நேர்ந்த விபரீதம்..! காதல் ஜோடி மரணம்.!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடி ஹெக்டோர் விடால் (36) மற்றும் மேத் எஸ்பினாஸ் (34). இவர்கள் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள் சம்பவம் நடந்த அன்று கஸ்கோ நகரில் பெத்தலேம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேத் எஸ்பினாஸ் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியின் மீது ஏறி அமர்ந்துள்ளார். ஹெக்டோர் விடால் தரையில் நின்று கொண்டிருந்தார் அப்போது மேத் தனது காதலன் இடுப்பில் கால்களை பின்னியபடி அவருடன் பேசி கொண்டிருந்தார்.

அதன் பின்னர் இருவரும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்து அன்பு பரிமாறினர். அப்போது திடிரென்று எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மேத் எஸ்பினாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெக்டோர் விடால் மருத்துவமனையில் சேர்க்க பட்டும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.