செங்கோட்டையில் தமிழில் பேசி கெத்து காட்டிய மோடி.!

டெல்லி செங்கோட்டையில் இன்று 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்தார். அதன் பின்னர் நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

அந்த உரையில், ” நாடு முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் முதலில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் இருப்பவர்கள் தான் சவால்களை சமாளிக்க கூடிய தந்திரரங்களை வகையாக கற்று இருப்பர்.

தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் பல இன்றளவும் இருக்கின்றது. நீண்ட தூரம் நடந்து போய் தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் அதிக மக்கள் வாழும் இடங்களில் இருக்கின்றது. ஜல் ஜீவன் மிஷன் மூலம் நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தார். அவரது வார்த்தைகள் தற்போது உண்மையாகி கொண்டு வருகிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து மோடி, தண்ணீரின் முக்கியத்தும் குறித்து விளக்கமாக உரையாற்றிய போது, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற குரலினை உதாரணம் காட்டி தமிழில் பேசியுள்ளார்.