சாவகச்சேரியில் திடீரென மயங்கி விழுந்த நபர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பழங்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்களை வழங்குவதாக எழுந்த போது அவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.