என் உண்மையை அறிந்து ஆத்திரப்பட்டாள்..! அடிவயிற்றில் அடித்தே கொலை செய்தேன்..!!

சென்னையில் உள்ள பெரியமேட்டில் இருக்கும் விடுதியொன்றில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில்., தூக்கில் பிணமாக இருந்த பெண்ணின் பெயர் மோகனா என்பதும்., இவர் இரயில்வேயில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில்., இவரது கணவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் ., கடலூரை சார்ந்த வீராசாமி என்பருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த பழக்கத்தை அடுத்து இவர்களுக்கு நாளடைவில் கள்ளகாதலும் மலர்ந்து., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது கடந்த 3 வருடமாக கணவன் – மனைவி போல பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் இருவரும் அங்குள்ள பெரியமேடு விடுதியில் அறையெடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில்., இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து., இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிய நிலையில்., ஆத்திரமடைந்த வீராசாமி தந்து வேட்டியால் கழுத்தை நெரித்து கொலை செய்து கொலை செய்துள்ளார். இதற்கு பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில்., மோகனாவின் புடவையை வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் போல நாடகத்தை அரங்கேற்றியுள்ளான்.

இந்த தகவல் விசாரணையில் தெரியவந்த நிலையில்., தப்பியோடிய வீரசாமியை காவல் துறையினர் திருவெற்றியூர் இரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வீராசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது., இரயில்வே துறையில் பணியாற்றி வந்த மோகனா., அதிகாலையில் வெளிக்கு சென்று காலை மற்றும் மத்திய நேரத்தில் கேன்டீனில் சாப்பிட்டு வருவதும் வழக்கம்.

அந்த சமயத்தில்., அங்கு பணியாற்றிய எனக்கும் – மோகனவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியதால்., வாரா வாரம் விடுமுறை நாளில் விடுதிக்கு சென்று உல்லாசத்தை மேற்கொண்டு வந்தோம். இந்த நிலையில்., நேற்று முன்தினம் இருவரும் பெரியமேடு விடுதிக்கு சென்ற சமயத்தில் உல்லாசமாக இருந்தேன்.

இதற்குப்பின் மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு மீண்டும் விடுதிக்கு சென்று போதையில் உல்லாசமாக இருந்தேன். இந்த நேரத்தில்., எனக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் உறவானது இருக்கும் உண்மையை உளறியதை அடுத்து., இருவரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மோகனா என்னை அடித்தாள். இதனால் ஆத்திரமடைந்து., அவளை அடித்து கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

அவள் துடித்தது உயிரிழந்தும் ஆத்திரம் அடங்காத நான்., மோகனாவின் பிறப்புறுப்பில் கையால் பல முறை கொடூரமாக அடித்து கொலை செய்தேன். பின்னர் அவளது ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி சேலையால் தூக்குபோட்டு மின்விசிறியில் தொங்கவிட்டு தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் அவனை சிறையில் அடைத்தனர்.