இளம் பெண்ணுடன் வெளியே சென்ற நடுத்தர வயதுக்காரர்- பின்னர் நடந்தது!

கொழும்பில் இளம் பெண்ணுடன் நடுத்தர வயதுக்காரர் சென்றபோது, அவர்களை சில இளைஞர்கள் கேலி செய்த சம்பவம் உயிர் பலிவரை கொண்டுசென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கொள்ளுப்பிட்டி, முத்தையா வீதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடந்த இந்த விவகாரத்தில் 47 வயதானவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அழகுக்கலை நிலையமொன்றின் உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இளம்பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் சென்று இறங்கியபோது, அங்கிருந்த இளைஞர்கள் ஐவர் அவர்களை கேலி செய்துள்ளனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, இளைஞர்கள் குறித்த நபரை கடுமையாக தாக்கிய நிலையில், படுகாயமடைந்த அவர் கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்களே இவ்வாறு கைசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞர்கள் யூனியன் பிளேஸ், போல்கசோவிட மற்றும் கண்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.