வெளிநாட்டிலிருந்து போன் போட்ட சிம்பு.! காலில் விழுந்த டி.ஆர்.!

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை தரிசிக்க பல இடங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சயன கோலத்தில் இருந்து தற்போது நின்ற கோலத்தில் தரிசனம் அளித்து வருகின்றார்.

இவ்வாறு அத்திவரதர் நின்ற கோலத்தில் தோன்றும் காட்சியை காண நாடு முழுதும் இருக்கும் பொதுமக்களும், பிரபலங்களும், பல அரசியல் தலைவர்களும் காஞ்சிக்கு வருகிய புரிகின்றனர்.

இந்த நிலையில், அதற்கு சினிமா நடிகர்களும் விதிவிலக்கல்ல என்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. இன்னும் சிறிது நாட்கள் தான் அத்திவாரதர் தரிசனம் காண இயலும் என்ற நிலை இருக்க, நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் தரிசனம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜேந்திரன், “மக்களுக்கு அத்திவரதர் நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். அத்திவரதரை காண மக்கள் கஷ்டப்பட்டு போகவில்லை, இஷ்டப்பட்டு தான் போகின்றனர்.

வெளிநாட்டில் இருக்கும் நடிகரும், எனது மகனுமான சிலம்பரசன்(நடிகர் சிம்பு) எனக்கு போன் செய்து அத்திவரத பெருமாளை தரிசித்து விட்டீர்களா? ” என கேட்கிறார். விரைவில் சிலம்பரசனுக்கு திருமணம் நடக்க அத்திவரதர் தான் பெண்ணை காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.