இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து அசத்திய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளனர் என தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை பெற்றது.
மேலும் அதில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டது.
இதனை மறுக்காமல் விஜய் சேதுபதி மற்றும் படத்தை தயாரிக்கவிருந்த தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் பேட்டிகளில் ஆமாம் என்றனர்.
இந்த நிலையில் தமிழீல ஆதரவாளர்கள் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களிடத்தில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ் ஈழத்துக்கு எதிராக இருந்த முத்தையா முரளிதரன் அவர்களின் பயோபிக்கில் நடிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் சேதுபதி தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதி எந்த அரசியலிலும் சிக்கி கொள்ளாமல் மக்களின் கருத்துக்கு மதிப்பு தருபவர். வீணான பிரச்சனைகளை தவிர்க்க அவர் இம்முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் தயாரிப்பு தரப்பு இது சம்பந்தமாக என்ன முடிவு எடுக்க உள்ளது என்பது தெரியவில்லை.






