முகநூலில் காதல்.. திருநங்கையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்..!

லட்சுமண் என்ற இளைஞர் கடலூர் அருகே வசிக்கும் திருநங்கை அமித்ராவை முகநூலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சின்ன சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

திருநங்கை அமிர்தா B.SC படித்துள்ளார். தற்போது வி.ஏ.ஓ மற்றும் காவல்துறை பணி தொடர்பான தேர்வுகளை எழுதி வருகிறார்.

அதோபோல், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமண் மும்பையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமிர்தா மும்பை சென்ற போது, முகநூல் மூலம் லட்சுமண் பழக்கமாகியுள்ளார். அதன்பின் நட்பு காதலாக மாறியது. ஆனால், லட்சுமனன் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைத்து இன்று காலை திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.